• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள்

ByAnandakumar

Apr 21, 2025

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரணைகள் காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், கரும்புச்சாறு, இளநீர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து வண்ண வண்ண மலர் மாலைகள், வடை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காலபைரவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நட்சத்திர ஆரத்தி, பஞ்ச கற்பூர ஆரத்தி, மகா தீபாரங்கள் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.