மார்கழி அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம் அதனடிப்படையில் இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ.ராம பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் கொப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 1000கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். வருகை தந்த அணைவருக்கும் அண்ணதானம் வழங்கப்பட்டது




