மதுரை நகரில் அம்மாவாசை முன்னிட்டு, பல கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு விஷயங்கள் நடைபெற்றது.
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், சௌபாக்கியவினர் ஆலயத்தில் அம்மாவாசை முன்னிட்டு, காலை தர்ப்பணம் நடைபெற்றது. அதை அடுத்து இக்கோயில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், அச்சனையில் நடைபெற்றது. இதை அடுத்து, கோயில் அமைந்துள்ள வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல, மதுரை அண்ணா நகர் யானைக்
குழாய் அறிமுக முத்துமாரியம்மன் ஆலயத்தில், மண்டல பூஜை நடைபெற்றது. இதை அடுத்து, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. வராகி மற்றும் ஆஞ்சநேயருக்கு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதை அடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மணிகண்டபட்டர் ஆய்வு செய்து இருந்தார்.
இதே போல, மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள ஆஞ்ச நேயருக்கு, சிறப்புபூஜை மற்றும் அர்ச்சனைகளை, குப்பு பட்டர் செய்திருந்தார். பக்த கோடிகளுக்கு பிரச்சாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீகம் பெண்கள் குழுவினர் செய்து இருந்தனர்.
