• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பால்மா தீவில் எரிமலை குழம்பு…புகைமண்டலமாக காட்சியளிக்கும் ஸ்பெயின்

Byகாயத்ரி

Nov 30, 2021

ஸ்பெயின் நாட்டின் பால்மா தீவில் எரிமலையில் புதிதாக லாவா குழம்பு வெளியேறுவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

ஸ்பெயின் லா பால்மா தீவில் உள்ள எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு ஆறாக ஓடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக லவா குழப்பு வெளியேறியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருப்பதாக ஸ்பெயினின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.10 வாரங்களாக நீடிக்கும் இந்த எரிமலை வெடிப்பால் 2,700 கட்டிடங்கள் மற்றும் 11,151 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகின.

லா பால்மா விமான நிலையத்தில் குவிந்திருந்த சாம்பல் அகற்றப்பட்டு விமான சேவை தொடங்கிய நிலையில், மீண்டும் புதிதாக நெருப்பு குழம்பு வெளியேறியதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.