மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை.
மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து வந்தனர். இவர்களுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் கணேசன், வண்ணக்கிளி, மீனாட்சி,தனம், வேந்தன் உள்பட மொத்தம் ஐந்து பிள்ளைகள்.இதில் வேந்தனுக்கு திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று வெற்றுவிட்டார்,குடி மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான வேந்தன் தாயுடன் வசித்து வந்தார்.
தாயார் சிந்தாமணிக்கு சொந்தமாக மேலக்கோவில்குடியில் சில சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்துக்களில் எனக்கு பங்கு வேண்டும் என்று சிந்தாமணியிடமும் உடன் பிறந்தவர்களிடமும் வேந்தன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
உடன் பிறந்தவர்கள் இந்த சொத்தை இப்போது விற்க இயலாது விற்றாலும் பங்கு தர முடியாது என்று என்று கூறியுள்ளனர். இதனால் வேந்தனுக்கும் குடும்பத்தினருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வரும்.நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த வேந்தன் தாய் சிந்தாமணியிடம் தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் வாக்குவாதம் செய்து உள்ளார். சிந்தாமணி சொத்துகள் பங்கை உனக்கு தர முடியாது என்று கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த வேந்தன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சிந்தாமணியை தாக்கி கொலை செய்துள்ளார். வேந்தன் தாக்கியதும் சம்பவ இடத்திலேயே சிந்தாமணி உயிரிழந்தார். இச்சம்பவம் தகவறிந்து வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் சிந்தாமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
‘ மற்றும் வேந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக பெற்ற தாயை அடித்து கொன்ற மகனால் மேலக்குயில்குடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.