முன்னதாக காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிர வாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
நிர்வாகிகள் இல்லாமல் “தனி ஒருவராக “செய்தியாளர் சந்திப்பில் சேக்தாவூது கூறியதாவது, வக்பு சொத்துக்கள் மீட்கப்பட்டால் ஏழை எளிய மக்கள் மக்கள் பொருளாதாரத்தில் மேம்படுவார்கள்: வக்பு திருத்தச் சட்டத்தின் நம்மைகள் குறித்தி இஸ்லாமிய இளைஞர்களை சந்தித்து விளக்கி வருகிறோம் என தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் மதுரையில் பேட்டி,

வக்பு சொத்தை காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் கொள்ளையடித்து வைத்துள்ளதால்தான் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிப்பு தெரிவிக்கின்றனர் என தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் மதுரையில் பேட்டி, அவர் பேசுகையில், “தமிழ் மாநில முஸ்லிம் லீக் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை முழுமனதாக ஏற்கிறோம்,
சிவன் சொத்து குல நாசம் என்பார்கள் ஏழை எளிய மக்களுக்கு எழுதி வைக்கப்பட்ட வக்பு சொத்தை பலர் அனுபவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே கோவை, வேலூர், சென்னையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக எடுத்து விளக்கினோம்.
இன்று மதுரையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை சந்தித்து மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்தச் சட்டத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விளக்க உள்ளோம்.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும் பொழுது வக்பு சொத்துக்களை மூன்று ஆண்டுகள் மட்டுமே குத்தகை எடுக்கும்படி உள்ளது, அதனை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நாசர் அதற்கு ஏற்றார் போல் மதுரையில் டிரிப்னல் அலுவலகத்தை திறந்து வக்பு சொத்தை நீண்ட காலம் குத்தகைக்கு கொடுக்கும்படியாக முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்தியாவில் மட்டுமே 39 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான வக்பு சொத்துக்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.
இதற்கு உதாரணமாக நீட் சிஏஏ என்.ஆ.ர்சி போன்ற சட்டங்கள் உள்ளன.
இந்தியாவில் உள்ள வக்பு சொத்துக்கள் அனைத்தும் ஏழை,எளிய மக்களுக்காக கொடுக்கப்பட்டது. அது இஸ்லாமியர்களுக்கான சொத்து மட்டும் அல்ல அனைத்து மதத்திற்கான சொத்தும் தான்.
வக்பு சொத்து மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் கிடைக்கும்.
இதனை எதிர்க்கும் பெரிய பணக்காரர்கள் இந்த வக்பு சொத்தை அபகரித்து அனுபவித்து வருபவர்கள். ஹிந்தி நடிகர் சையப் அலிகான், அம்பானி ஆகியோர் வக்பு சொத்தை அபகரித்து உள்ளனர்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஹைதராபாத்தில் அதிக அளவிலான வக்பு சொத்துக்களை உள்ளனர், இதனை பலர் அனுபவித்துவருகிறார்கள்,
தமிழ்நாட்டில் அண்ணா சிலை முதல் விமானம் நிலையம் வரையிலான சொத்துக்கள் உள்ளன, இதனை யார் யாரோ அனுபவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்களுக்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என்ன ஆனது,
வக்பு திருத்த சட்டம் தொடர்பாக இளைஞர்களை சந்திக்க இஸ்லாமிய ஜமாத்தினர் தடுத்து வருகின்றனர். அதனை மீறி சந்தித்து எடுத்துரைத்து வருகிறோம்,
எனவே, இந்தியா முழுவதிலும் வக்பு திருத்தச் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து எடுத்துரைத்து வக்பு திருத்தச் சட்ட சொத்துக்களை அனுபவிப்பவர்கள் யார்? யார்? என இணையதளத்தில் பதிவிட வேண்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்??.
2013-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர்கள் வக்பு சொத்தை கொள்ளை அடித்து அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள். யார் யார் வக்பு சொத்தை அனுபவித்தார் என்பது தொடர்பாக வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டும்.
வக்பு சொத்தை அனுபவித்து வருபவர்களே இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள், மக்கள் இச்சட்டத்தி நன்மைகள் தெரியாமல் எதிர்க்கிறார்கள்,
வக்பு சட்டத்திற்கு ஆதரவாக “வக்பு பார் உம்மத்து” என இணையதளத்தில் பதிவு செய்து எங்களின் ஆதரவை டிரண்டிங் செய்ய உள்ளோம், வக்பு சட்டத்திற்கு ஆதரவாக
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வக்பு திருத்த சட்டம் தொடர்பாக மக்களிடையே விளக்கிக் கூற உள்ளோம்.
பாஜக கொண்டு வந்த காரணத்திற்காகவே வக்பு திருத்த சட்டத்தை எதிர்ப்பது ஏற்புடையது இல்லை, வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் வக்பு சொத்துகள் மீட்கப்பட்டு ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள், பொருளாதார ரீதியாக மேம்படுவார்கள்”, என கூறினார்.