சொமேட்டோ நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, அந்தப் பெண் ஊழியரின் படத்துடன் கூடிய போட்டோ கேக் ஒன்றை டெலிவரி செய்து ஆனந்தப்படுத்தியிருக்கிறார்.
20 வயதில் பணியில் சேர்ந்திருக்கிறார். அதன் பின்னர் தொடர்ந்து 10 வருடங்களாக பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட அந்த நிறுவனத்தை தன் குடும்பம் போலவே கருதி வருகிறார். இந்நிலையில், அந்த பெண் ஊழியருக்கு சர்ப்ரைஸ் தர விரும்பிய சொமோட்டோ நிறுவனத்தின் சிஇஓ சர்ப்ரைஸாக அவரது புகைப்படத்துடன் கேக் தயார் செய்து, அவரே நேரிடையாக சென்று டெலிவரி செய்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான சொமேட்டோ நிறுவனம் அன்னையர் தினத்தன்று “ஃபோட்டோ கேக்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படங்களை தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய அம்சத்தை சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, ஆர்டர் செய்யப்பட்ட கேக் அரை மணி நேரத்தில் பயனாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அன்னையர் தினத்தன்று “ஃபோட்டோ கேக்” வசதியைப் பயன்படுத்தி நிமிடத்திற்கு 150 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சொமாடோ நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் 10வது ஆண்டு நிறைவையொட்டி, “போட்டோ கேக்” தயாரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. மேலும் அவரே அந்த ஊழியருக்கு கேக்கை வழங்கினார். இந்நிலையில், சோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “சோமாடோவில் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள ஆஷ்னாவை வாழ்த்துவதற்காக, “ஃபோட்டோ கேக்” என்ற புதிய அம்சத்தை அவருக்குப் பரிசளித்தோம். அவர் தனது 20வது வயதில் சோமாடோவில் சேர்ந்தார். இப்போது சொமேட்டோ ஹெச் ஆர் குழுவின் இணைத் தலைவராக உள்ளார். அன்னையர் தினத்திற்காக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த எங்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றிய எங்கள் உணவக உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.
10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பெண் ஊழியருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சொமேட்டோ நிறுவனம்
