• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சூரிய சக்தியால் இயங்கும்உதவி ஆய்வு மையத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Byஜெ.துரை

Feb 7, 2024

தனியார் வங்கி மென்பொருள் நிறுவனமான “டெமினோஸ்” ன் சமூக சேவையின் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்த்தில் அமைந்துள்ள பிரசிடன்சி கல்லூரியில் செவித்திறன் மற்றும் பார்வை திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் 20 கிலோ வாட் சூர்ய சக்தியால் இயங்கும் உதவி தொழில் நுட்ப ஆய்வகத்தை 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டி கொடுத்துள்ளனர்.
இந்த ஆய்வகத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,டெமினோஸ் நிறுவன மண்டலத் தலைவர் கணேசன் ஸ்ரீராமன்,ஆப்ரேஷன் தலைவர் பிஜுமோன் ஜேக்கப் மற்றும் கிதியோன்(ஊளுசு ர்நயன) ஆகியோர் உடன் இருந்தனர்
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டெமினோஸ் நிறுவன மண்டலத் தலைவர் கணேசன் ஸ்ரீராமன் கூறியது:
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன் தரும் விதமாக முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய உதவி ஆய்வகத்தை வடிவமைத்துள்ளதாகவும் ஆய்வகத்தில் ஸ்கிரீன் ரீடர்கள் பேச்சு அறிதல் மென்பொருள் தகவல் அமைப்பு விசைப்பலகைகள் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது இதன் மூலம் மாற்றுத் திறனாய் மாணவர்கள் எளிமையாக கணிணி பயிற்சியை மேற்கொள்ள முடியும் எனவும் தங்கள் நிறுவனம் இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான கல்வி விதைகளை செய்து வருவதாகவும், இந்த ஆய்வகம் முழுமையாக கல்லூரி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் எனவும் ஆனால் பராமரிப்பு செலவுகளுக்கான செலவுகளை தங்கள் நிறுவனமே வழங்கும் எனவும் கூறினார்.