தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் போடி தாலுகா மற்றும் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள மறவப்பட்டி, இ புதுக்கோட்டை, வேப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிப்பதற்காக சோலார் பேனல் அமைக்கும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி சீலையம்பட்டி சாலையில் பல ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் அமைக்கப்பட்டது.
இதே போல் போடி தாலுகா உத்தமபாளையம் தாலுகா மறவபட்டி மற்றும் இ புதுக்கோட்டை பகுதிகளில் நன்றாக விவசாயம் செய்யக்கூடிய விவசாய நிலங்களில் அழித்து மின்சாரம் தயாரிப்பதற்காக சோலார் பேனல் அமைக்கும்படி தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.