• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரையில் போலி மாநகராட்சி அடையாள அட்டையை பயன்படுத்தி மண் கடத்தல்

ByA.Tamilselvan

Jun 12, 2022

மதுரையில் போலி மதுரை மாநகராட்சி அடையாள அட்டையை சட்டவிரோதமாக பயன்படுத்தும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள்
மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் அருகே அமையும் வணிக வளாகம் அமைக்க பள்ளம் தோண்டும் போது வெளியான மண்ணை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி.மற்றும் தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளம் போன்ற இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
கனிம வளத்துறை அனுமதியோடு ஒப்பந்தம் விடப்பட்டு மண் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மீறி தனியார் மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 டிப்பர் லாரிகளில் சேமித்து வைக்கப்பட்ட மண்ணை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் வாகனங்களை மடக்கி பிடித்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது அங்கு வந்த முகமது நசீர் என்பவர் தான் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எனவும் உரிய அனுமதியோடு மாநகராட்சி பணிக்காக மண் எடுத்து செல்வதாக தெரிவித்தார். அப்போது அவரது அடையாள அட்டையை சோதனை செய்தபோது மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் அரசு அடையாள அட்டையை முகம்மது நசீர் போலியாக தயாரித்து வைத்தது தெரியவந்தது. மேலும் அந்த அடையாள அட்டையில் தனியார் ஒப்பந்த நிறுவன பெயர் இடம்பெற்றுள்ள நிலையில் மாநகராட்சி நகர பொறியாளர் அகிலத்தில் அச்சு அசலாக பொறிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் நகர் பொறியாளர் அரசு தற்சமயம் கோயம்பத்தூர் இடம்பெயர்ந்து உள்ளார் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மாநகராட்சி தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு இப்படி ஒரு அடையாள அட்டை வழங்கப்படுகிறதா அதில் உங்கள் கையெழுத்து உள்ளதே என்ற கேள்விக்கு அது என்னுடைய கையெழுத்து இல்லை என்னுடைய கையெழுத்து போன்று போட்டுள்ளார்கள்.
இது கண்டனத்துக்குரியது சட்டத்திற்கு விரோதமானது சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நான் உரிய முயற்சி மேற்கொள்வேன் தெரிவித்திருக்கிறார். அவரே இது ஒரு போலியான அடையாள அட்டை இடவும் தெரிவித்ததை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அள்ளப்படும் மணல் விலை தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது என்ற வழக்கும் நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் இதுபோன்ற அரசின் அடையாள அட்டையை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.