• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

“முடி வெட்ட இவ்வளவு ரூபாயா”.. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடி திருத்தம் ஆகியவற்றிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனவரி 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சலூன் கடைகளில் முடி திருத்தம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் சாதரணமாக கடைகளில் முடி வெட்டுவதற்கு 150 ரூபாயும், ஷேவிங் செய்வதற்கு 80 ரூபாயும், கட்டிங் மற்றும் சேவிங் செய்ய 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏ.சி.வசதிகள் கொண்ட கடைகளில் முடி வெட்டுவதற்கு 180 ரூபாயும், ஷேவிங் செய்வதற்கு 100 ரூபாயும், கட்டிங் மற்றும் சேவிங் செய்வதற்கு 250 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பேசியல், டை அடித்தல் போன்றவற்றிற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமஜெயம் தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து செயலாளர் துரைசாமி, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.