நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பட்டாசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “வான்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன பிறகும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram