• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தல்..!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி அலகிற்கு உட்பட்ட மதுக்கரை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் பொள்ளாச்சி அலகு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்தபோது வுN 99 ஆ 9391 என்ற பதிவெண் கொண்ட டாட்டா ஏசி நான்கு சக்கர வாகனம் மற்றும் வாகன ஓட்டுனர் அப்பு என்கிற அபுதாகிர் என்பவரை பிடித்து விசாரித்ததில் வாகனத்தில், 50 கிலோ எடை கொண்ட வெள்ளை நிற 30 சாக்கு மூட்டைகளில் சுமார் 1500 கிலோ தமிழக அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக ரேஷன் அரிசி கேரள மாநிலத்தில் அதிக லாபத்திற்கு விற்பதற்கு கடத்தி சென்றது தெரியவந்ததை அடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அப்பு மீது வழக்குப்பதிவு செய்து மேலும் கடத்தலில் தொடர்புள்ள தலைமறைவுவாக உள்ள செலினா என்ற பெண்ணையும் கேரளாவில் அரிசி வாங்கும் நூருக்குட்டியையும்தேடி வருகின்றனர்.