• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மோடி, அண்ணாமலை பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு- பா. ஜ. க.வினர் புகார்

ByKalamegam Viswanathan

Mar 1, 2023

பாரத பிரதமர் மோடி, மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர். அண்ணாமலை ஆகியோர் பெயருக்கும், புகழுக்கும், களங்கம் ஏற்படும் வகையில் “ராஜலிங்கம் தி.மு.க என்பவரது முகநூலில் அவதூறு செய்திகள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியை, ஆல் இந்தியா திருடன் என்றும், தமிழ்நாடு பா. ஜ. கட்சித் தலைவர் அண்ணாமலையை ஆருத்ரா திருடன் என்றும் அவதூறு பரப்பி வருகின்றனர். இருவரும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர்கள்.இந்த தவறான முகநூல் பதிவால் இருவரது பெயருக்கும் புகழுக்கும் மிகுந்த களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, திட்டமிட்டு அவதூறு பரப்பிய இத்தகைய தேச துரோகிகள் மீது நடவடிக்கை கோரி, பா. ஜ. க. மதுரை மாநகர் மாவட்டத் தலைவர். மகாசுசீந்திரன், தாமரை சேவகர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர். வக்கீல் எஸ். முத்துக்குமார், ஐ. டி விங் மாநிலச் செயலாளர். விஸ்வநாத், சிறுபான்மையினர் அணி மாநிலச் செயலாளர். சாம்சரவணன் , வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர். நாகராஜ் ஆகியோர் மாநகர காவல் ஆணையாளரிடமும், பொருளாதார பிரிவு துணைத் தலைவர். ரமேஷ்குமார், கிழக்கு மாவட்ட ஐ.டி. விங் தலைவர். ராம்சரண் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், மாநகர் ஐ. டி. விங் துணைத் தலைவர், ராஜா எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திலும், மாவட்ட செயலாளர். சந்திரசேகர் கரிமேடு காவல் நிலையத்திலும், இளைஞரணி தலைவர். பாரிராஜன் தல்லாகுளம் காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர். அனைத்து புகார் மனுக்களும் மேல் நடவடிக்கைக்காக சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்ப பட்டுள்ளது.