கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கு அதிகமான மீனவ இளைஞர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளார்கள்.


பயிற்சி பெற்ற 13,000_பேர் இதுவரை அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக . இன்றைய புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் பேசும் போது அதிகாரி தெரிவித்தார்.
கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமை தாங்கினார். நாகர்கோவில் துணை சூப்பிரண்டு பாலாஜி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். முன்னதாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழுமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வரவேற்று பேசினார்.


இன்றைய பயிற்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் கடலோர பகுதிகளில் உள்ள 70_ மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 90 _நாட்கள் பயிற்சி இலவசமாக கொடுப்பதுடன். தங்கும் இடம்,உணவு எல்லாம் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படுவதுடன். மாதம் ரூ.1000.00 உதவி தொகையும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

