• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை வில்லாபுரத்தில் மர்மமான முறையில் ஆறு மாத பெண் குழந்தை இறப்பு..!

ByKalamegam Viswanathan

Aug 22, 2023

மதுரை வில்லாபுரத்தில் மர்மமான முறையில் ஆறு மாத பெண் குழந்தை இறப்பு-தாசில்தார் முன்னிலையில் பிரேதத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் அகஸ்தியர் தெரு பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன்-(வயது 27).கார்த்திகை ஜோதி( வயது 25).தம்பதியினருக்கு அரிமித்ரன் (வயது 5) ஒரு ஆண் குழந்தையும், 6 மாத பெண்குழந்தை உள்ளது
குழந்தை அதிதி நாச்சியாருக்கு பிறந்தது முதல் இதய நோய் உள்ளது இது தொடர்பாக அவர்கள் பல்வேறு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வருகின்றனர் நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீண்டும் மதுரை வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் 6 மாத பெண் குழந்தை அதிதி நாச்சியார் இறந்து விட்டதாகவும், இதனால் அருகில் உள்ள இடத்தில் நேற்று அதிகாலை புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வந்த தகவலதகவல் அடிப்படையில், சம்பவ இடத்தில் அவனியாபுரம் காவல்துறையினர் பாதுகாப்பில் மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி ஆர் ஐ பிருந்தா கிராம் நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆறு மாத கைக்குழந்தை புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வில்லாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது…