• Wed. Dec 11th, 2024

மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள் “பூங்கொடி” என்ற திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு…

Byகுமார்

Aug 22, 2023

மதுரையில் காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி அரங்கத்தில் பிரஷ்யா புரடெக்சன் சிவாஜி வழங்கும் மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள். “பூங்கொடி” “திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு தயாரிப்பாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் விளாங்குடி வீரமுத்து திரைப்படத்தின் இயக்குனர் பால்பாண்டி முன்னிலையிலும் இவ்விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநீவாசன் மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் திருமாறன் ஜி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தொழிலதிபர் குருசாமிஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பட பூஜையினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி வாழ்த்துகள் கூறுகையில் சமீபகாலங்களாக நல்ல படங்களுக்கு வேலை இல்லை எல்லா சமுதாய இயக்குனர்களும் சாதியம் எல்லா இடங்களிலும் சினிமாவில் வந்துவிட்டது எல்லா இயக்குனர்களும் சாதியும் இல்லாத நல்ல சமூகப் படங்களை கொடுக்க வேண்டும் இந்த வகையில் பூங்கொடி திரைப்படம் குழந்தையை பற்றி திரைப்படம் சமுதாயத்திற்கு நல்ல கருத்தினை வழங்க வேண்டும் என கூறினார் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன் கூறியது பல பேர் பார்த்து வியக்கின்ற தம்பி சிவாஜி ஆங்கிலமும் தெரியாமல் ஹிந்தியும் தெரியாமல் டெல்லியில் அனைவரையும் தெரிந்த நபர் சிவாஜி ஆளுமை மிக்கவர் அவர் இந்த படத்தை தயாரித்து வெளியிடுவது ஆச்சரியம் அளிக்காது எனக் கூறினார்.