• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது….

ByKalamegam Viswanathan

May 3, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி சிங்க வாகனத்தில் கடைக் கோவிலில் எழுந்தருளினார். பின்னர் கடைக் கோவிலில் இருந்து வீதிவலம் வந்து பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஸ்ரீபத்திரகாளியம்மன் வருகை தந்தார். இதனையடுத்து மேளதாளம் முழங்க, கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. கொட்டும் மழையிலும், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் ஸ்ரீபத்திரகாளியம்மன் ரதவீதிகளில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனாலும் திரளான பக்தர்கள் அம்மன் வீதியுலா ஊர்வலத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்