• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகாசி: இளைஞர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

ByBala

Apr 24, 2024

சிவகாசி அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ஆனையூர் ஊராட்சி தலைவர் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சிவகாசி சேனையாபுரம் காலனியைச் சேர்ந்த அரவிந்தன் என்ற பார்த்திபன்(28). இவர் லோடுமேன் வேலை செய்து வந்தார். இவர் மீது இரு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 30.3.2022ம் ஆண்டு அரவிந்தன், தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத் தெருவை சேர்ந்த துரைபாண்டியன்(25) என்பவருடன் எம்.கள்ளிப்பட்டி அருகே பைக்கில் சென்ற போது, மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில், பார்த்திபன் உயிரிழந்தார். இந்த வழக்கில் சிவகாசி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த அருண்பாண்டியன்(31), பார்த்திபன் (32), முத்துக்கிருஷ்ணன்(33), பாண்டியராஜன்(19), மகேஸ்வரன்(19),மதன்குமார்(32), பழனிசெல்வம்(37), நேருஜி நகரை சேர்ந்த மாரீஸ்வரன்(26), இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டபிரபு(18), சிலோன் காலனி ஹரிகுமார்(21), ஆணையூர் ஊராட்சி தலைவர் லட்சுமிநாராயணன்(38), பிரவீன்(35), அந்தோணிராஜ்(35), பொன்ராஜ்(25), சவுந்தர்(25), ஜோதிலிங்கம்(22) ஆகிய 16 பேரை எம்.புதுப்பட்டி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அருண்பாண்டியன், பார்த்திபன், மதன், ஜோதிலிங்கம், பொன்ராஜ், மாரீஸ்வரன், பழனிசெல்வம் ஆகிய 7 பேருக்கு ஆயுள் சிறை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.