• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜ்கமல்பிலிம்ஸ் சார்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படமொன்றை தயாரிக்கப்போவதாக தகவல் வெளியானது ஆனால் அது நடக்காமல் போனது அதற்கு காரணம் தற்போது கமல்ஹாசனுடன் தொழில்ரீதியாக சக பார்ட்னராக இருக்கும் மகேந்திரன் என கூறப்பட்டது கமல்
ரஜினிகாந்த் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான பூர்வாங்கபேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்த பின் ஒப்பந்த நகல் ரஜினிகாந்த்க்கு அனுப்பபடுகிறது அதில் ராஜ்கமல் மற்றும் மகேந்திரனின் டிரீம் மெரிக் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் என்பதை படித்த ரஜினிகாந்த் கமல்ஹாசன் நட்புக்காக அவர் நலனுக்காகவே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் மற்றவர் நலனுக்காக கமல்ஹாசன் பெயர் பயன்படுத்தப்பட்டு கால்ஷீட் கேட்பதற்கு நான் தரமுடியாது என கூறியதால் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க முடியாமல் போனது.

ஒரு காலத்தில் கமல்ஹாசனை சந்திக்க அவரது பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் தயவுக்காக காத்திருந்த மகேந்திரன் இப்போது கமல்ஹாசன் சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருந்தார் அவரது புகழ் வெளிச்சத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தையும், தன்னையும் பிரபலபடுத்திக்கொள்ள முயற்சித்தார் அதற்கு ரஜினிகாந்த் முட்டுக்கட்டை போட்டார் வாய்ப்புக்காககாத்திருந்த மகேந்திரன் காய்நகர்த்தலில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை கமல்ஹாசன் – மகேந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கப்போகின்றனர் என்கிற செய்திகள் கசிந்துவந்த நிலையில் சோனி பிக்சர்ஸ் நிதி உதவியுடன் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ரங்கூன் படத்தை இயக்கியவரும், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 ல் பணியாற்றிவரும் ராஜ்குமார் பெரியசாமி சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறார் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இருவரும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த காலத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.