• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிக்கும் படம் துவங்கியது..!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனும், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ்(SPIP) நிறுவனமும் இணைந்து தயாரிக்கும், பன்முகத் திறமை கொண்ட நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் சிறந்த நடிகையான சாய் பல்லவி நடிக்கும் SK21 திரைப்படம் ஏப்ரல் 5 அன்று பூஜை நிகழ்வுடன் துவங்கியது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், சண்டை இயக்குநர்ர் ஸ்டெஃபன் ரிக்டர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.


பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக இது இருக்கும். அதிரடி ஆக்‌ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் பயணிக்கும் SK21 ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், இணை தயாரிப்பாளர் வக்கீல் கான், பொது மேலாளர் மற்றும் தலைவர் (SPIP) லாடா குருதேன் சிங், மற்றும் RKFI தலைமை செயல் அதிகாரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான விழாவுடன் தொடங்கியது.
இதன்படப்பிடிப்பு காஷ்மீரில் 60 நாட்கள் நடைபெறவுள்ளது.