• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை – திமுக சார்பில் நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற அடிப்படையில் வீதி, வீதியாக சென்று திமுகவினர் தெருமுனை பிரச்சாரம்

ByG.Suresh

Feb 27, 2024

தமிழக முதல்வரின் கட்டளைபடி கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை நகர திமுக சார்பில் நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான துரைஆனந்த் தலைமையில் திமுகவினர் கழக அரசின் 24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அரசின் சாதனைகள் அடங்கிய அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை சிவகங்கை நகர் பேருந்து நிலையம் அரண்மனை வாசல் நெல் மண்டி தெரு நேருபஜார் பல பகுதிகளில் நேரடியாக சென்று பொது மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி கழக அரசின் சாதனைகளைப் பற்றி எடுத்துரைத்தனர் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் வழங்கினார்கள். பின்னர் ஸ்டாலின் குரல் என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை வணிக நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் ஒட்டி தின்னை பிரச்சாரம் மூலம் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வில் தொகுதியின் மேற்பார்வையாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகவேல், மாவட்டத் துணைச் செயலாளர் மணி முத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் வீனஸ் ராமநாதன், சரவணன் நகர,தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சதீஷ் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். இதே போன்று சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திலகவதி முன்னிலையில் குறிஞ்சி நகர் மற்றும்உள்ள பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஸ்டாலினின் குரல் என அச்சடிக்கபட்ட துண்டு பிரசுரத்தை வழங்கினார்கள்.