• Mon. Apr 29th, 2024

பொங்கல் விழாவை வித்தியாசமாய் கொண்டாடிய சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி…

ByG.Suresh

Jan 14, 2024

சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிப்பட்டி மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வாடிவாசல். காளைக்கன்றுக்கு மரியாதை செய்த பள்ளி மாணவர் தலைவர் சுந்தரேசஹரி, மாணவர் தலைவி ஹேமாவதி மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவர்களுடன் மாணவ, மாணவியர்.

இது குறித்து பள்ளித் தலைவர் டாக்டர்.பால.கார்த்திகேயன் கூறுகையில், தமிழரின் முக்கியத் திருநாளான தைப்பொங்கல் அன்று புத்தரிசி இட்டு, புதுப்பானையில் பொங்கலிடும் பாரம்பரியத்தினை மாணவர்களுக்கு கூறும் வகையில், இந்த வருடம் சமத்துவப் பொங்கல் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வகுப்பு வாரியாக பொங்கலிட்டு இறை வழிபாடு செய்தனர். பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நேர்த்தியான பாரம்பரிய உடையணிந்து பள்ளிக்கு வருகை புரிந்தது சிறப்பாக இருந்தது.

மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், கும்மியாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில், ஒரு சிறிய கிராமம் போன்று குடிசை, மாட்டு வண்டி, கருப்பசாமி கோவில் போன்றவைகள் அமைக்கப்பட்டு அதன் முன்பு பொங்கலிட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக பள்ளியில் அமைக்கப்பட்ட “வாடிவாசல்” வழியாக இளங்கன்றுகள் வரவழைக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தியது. மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்தது. விழாவின் இறுதி நிகழ்வாக உரியாட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நான்காம் வகுப்பு மாணவன் பவன் சாய்ராம் உரியடித்து ஆட்ட நாயகனாக பாராட்டு பெற்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *