• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் சிறப்பு கூட்டம்..!

ByG.Suresh

Jan 12, 2024

சேலம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள தெற்கு ஒன்றிய கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வருகின்ற 21ஆம் தேதி சேலம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும், கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடுவது குறித்தும் மற்றும் பூத் கமிட்டி சம்பந்தமான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சிவகங்கை ஒன்றிய துனை செயலாளர் கொட்டகுடி பஞ்சவர்ணம், மாவட்ட பிரதிநிதி மனோகரன், தியாகராஜன், ஒன்றிய பொருளாளர் பாண்டியராஜன்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ஒமேகா திலகவதி கண்ணன், மாவட்ட மகளிர் அணி மார்க்கெட் கமலா, செல்வராணி,, இளைஞர் அணி அமைப்பாளர் தங்கச் செல்வம், மாணவரணி அமைப்பாளர் ஜெ.ஆர்.ராம்குமார், புதுப்பட்டி முத்துக்குமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ராஜேஸ்வரி,அழகு சுந்தரம், சக்கந்தி தங்கச்சாமி, மூக்குத்தி பாலா, வேப்பங்குடி பொன்னம்பலம் உட்பட திமுக கழக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.