சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் மீது மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது . அத்துடன் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது ரூபாய் 525 கோடி நிதி மோசடி புகார் குறித்த ஆடியோ ஆதாரத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது,
“தேவநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதமாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ள நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட பி படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார்?
நிதி மோசடி செய்துள்ள பாஜக வேட்பாளர் தேவநாதனை, அண்ணாமலையும் தமிழிசையும் பாதுகாக்கக் கூடாது” என்றார்.