• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அன்னை திருத்தலத்தில் உள்ளிருப்பு போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Jul 19, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருத்தலத் தில் மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் இராமநாதபுரம் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவ பொதுமக்கள் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.

இங்கு திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தையாக வளன் என்பவரும் நிர்வாக பங்கு தந்தையாக வினோ என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பணி செய்து வந்த சாணாம்பட்டியைச் சேர்ந்த மதன் ஜெயராஜ் (40) என்பவர் வரக்கூடிய கிறிஸ்துவ பக்தர்களிடம் போலியான ரசீதுகொடுத்து ஊழல் செய்ததாகவும் அதற்கு உறுதுணையாக முன்னாள் பங்கு தந்தைகளும் மற்ற பணியாளர்களும் செயல்பட்டதாக பங்கு தந்தை வளன் வாடிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பங்குத் தந்தை வளனை பணி மாற்றம் செய்யப் போவதாக தகவல் தெரிந்து பங்கு மக்கள் திருச்சபை பாடகர் லூர்ராஜ் தலைமையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் அனைவர் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுக்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் செய்து வருகிறார்கள்.

இன்று காலை முதல் நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பங்கு மக்கள் பங்கேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.