• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சர் எர்மன் போண்டி பிறந்த தினம் இன்று (நவம்பர் 1, 1919)…

ByKalamegam Viswanathan

Nov 1, 2023

சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) நவம்பர் 1, 1919ல் வியன்னா, ஆஸ்திரியாவில் ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வியைப் வியன்னாவில் பெற்றுள்ளார். இவர் இளமையிலேயே கணிதத்தில் வல்லமை பெற்றிருந்துள்ளார். ஆபிரகாம் பிரேங்க்லால் ஆர்த்தர் எடிங்டனுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பிரேங்கல் இவருக்குச் சற்றே விலகிய சுற்றத்தினர். மேலும் போண்டியின் சுற்ற வலயத்தில் இவர் ஒருவரே கணிதவியலாளராக இருந்தவர். இவர்து தாயார் தன் இளைய மகனை பிரேங்கலுக்கு அறிமுகப்படுத்துவதில் அரிய பங்காற்றியுள்ளார். இது இவருக்கு சொந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் கணிதவியல் தடத்தில் செல்லவும் உதவும் என இவரது தாயார் எண்ணினார். எடிங்டன், போண்டி இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் கணிதம் பயில ஆர்வம் ஊட்டினார். எனவே இவர் 1937ல் கேம்பிரிட்ஜ் வந்துள்ளார். இது இவருக்கு ஆத்திரியச் செமித்திய எதிர்ப்பில் இருந்து தப்பிக்க உதவியுள்ளது. 1938ல் தம் பெற்றோரின் அவலமான கதியறிந்த இவர் அவர்களை உடனே ஆத்திரியாவை விட்டு கிளம்பும்படி தொலைவரிச் செய்தி அனுப்பியுள்ளார். அதன்படி, அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்து பின் நியூயார்க்கில் வாழத் தொடங்கியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் கனடாவில் உள்ள ஐல் ஆப் மேன் தீவில் அகதியாகச் சென்றார். இவருடன் அங்கே அகதியாகத் தாமசு கோல்டும் மேக்சு பெருட்சும் இருந்துள்ளனர். போண்டியும் கோல்டும் 1941ல் விடுவிக்கப்பட்டு, ஆயிலுடன் இராடாரில் அரசு ஆட்சிக் குறிகை நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இவர் 1946ல் பிரித்தானியக் குடிமகன் ஆனார். போண்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945 முதல் 1954 வரை கணிதவியல் விரிவுரையாளராகப் பணியாற்ரினார். இவர் டிரினிடியின் ஆய்வுறுப்பினராக 1943-9, 1952-4 ஆகிய ஆண்டுகளில் இருந்தார். போண்டி 1948ல் பிரெடு ஆயில், தாமசு கோல்டு ஆகியோருடன் இணைந்து அண்ட்டத்தின் நிலைத்தநிலைக் கோட்பாட்டை உருவாக்கினார். இக்கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையும் அதேநேரத்தில் புதிய விண்மீன்களையும் பால்வெளிகளையும் உருவாக்க தொடர்ந்து நிலையான அடர்த்தியைப் பேண, பொருண்மமும் உருவாகிறது.

அண்மையில் பெருவெடிப்புக் கோட்பாட்டின்படியான அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சுப் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டதால் இக்கோட்பாடு சற்றே பின்வாங்கியுள்ளது. ஈர்ப்புக்க் கதிர்வீச்சின் தன்மையைச் சரியாக உணர்ந்தவர்களில் போண்டியும் ஒருவராவார். இவர் போண்டி கதிர்வீச்சு ஆயங்களையும், போண்டி K கலனத்தையும். போண்டி பொருண்மை விளக்கங்களையும், போண்டி செய்தியையும் அறிமுகப்படுத்தினார். சார்பியல் குறித்துப் பல மீள்பார்வைக் கட்டுரைகளையும் எழுதினார். போண்டி விவாதத்தை மக்களிடையே பரப்பினார். இது ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த்து. இதன்படி, பொது சார்பியல் கோட்பாடு பொருள்பொதிந்த புறநிலையாக நிலவும் ஈர்ப்புக் கதிர்வீச்சை முன்கணித்தது. இந்த உறுதிப்பாடு 1955 வரை விவாத்த்திலேயே இருந்தது. 1947ல் ஒரு ஆய்வுக் கட்டுறை இலெமைத்ரே-டோல்மன் பதின்வெளியில் ஆர்வத்தைப் புத்துயிர்ப்புறச் செய்தது. இது இலெமைத்ரே-டோல்மந்போண்டி பதின்வெளி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வெளி ஒருபடித்தற்ற கோலச் சீரொருமை வாய்ந்த்தூசுத் தீர்வாகும்.

போண்டி மேலும் வளிம முகிலில் இருந்து விண்மீன் அல்லது கருந்துளை உருவாகும் அகந்திரளுதல் கோட்பாட்டிற்கும் இரேம்மண்டு இலிட்டில்டனுடன் இணைந்து பங்களிப்பு செய்துள்ளார். இதற்கு போண்டி அகந்திரளுதல் கோட்பாடு அல்லது போண்டி ஆரக் கோட்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. 1954ல் இலண்டன் கிங்சு கல்லூரியில் பேராசிரியரானார். மேலும் 1985ல் தகைமைப் பேராசிரியராகவும் அழைக்கப்பட்டார். இவர் 1956 முதல் 1964 வரை அரசு வானியல் கழகத்தின் செயலராக இருந்துள்ளார். இவர் வாழ்நாள் முழுவதும் சிறந்த மாந்தநேயராக விளங்கினார். இவர் 1982 முதல் 1999 வரை பிரித்தானிய மாந்தநேயக் கழகத்தின் தலைவராகவும் விளங்கினார். இவர் 1982ல் இருந்து பகுத்தறிவு ஊடகக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மாந்தநேயக் கொள்கை அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

போண்டி பிரெடு ஆயிலுடனும் தாமசு கோல்டுடனும் இணைந்து அண்டத்தின் நிலைத்த நிலை கோட்பாட்டைக் கண்டுபிடித்தமைக்காகப் பெயர்பெற்றவர். இது பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கான மாற்றுக் கோட்பாடு ஆகும். இவர் பொது சார்பியல் கோட்பாட்டுக்குப் பங்களிப்பு செய்துள்ளார். அண்டத்தின் நிலைத்த, நிலை கோட்பாட்டைக் கண்டுபிடித்த சர் எர்மன் போண்டி செப்டம்பர் 10, 2005ல் தனது 85வது அகவையில் இங்கிலாந்து, கேம்பிரிச்ஜில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.