

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையல், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் ‘கரும்ப விவசாயி ‘ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சி சின்னம் சிறிதாக அச்சிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னம் லேசாகவும் சிறியதாகவும் அச்சிடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படுவதாக குற்றம் சாட்டினர். பின்னர், அவர்கள் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியை நேரில் சந்தித்து இது தொடர்பான புகார் மனுவை அளித்தனர்.