• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இரட்டை குழந்தைகளுடன் பாடகி சின்மயி..!

Byவிஷா

Jun 19, 2023

கடந்த 2014ம் ஆண்டு பாடகி சின்மயி – நடிகர் ராகுல் ரவீந்திரன் 2 பேரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த வருடம் தான் இரட்டை குழந்தைகள் பெற்றனர். சின்மயி ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தபோது, வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றீர்களா என பலரும் கேள்வி எழுப்பினர்.

அதன்பிறகு தான் கர்ப்பமாக இருந்த போட்டோக்களை சின்மயி வெளியிட்டார். எனினும் சின்மயி குழந்தைகள் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் முதன்முறையாக தன் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.