• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரையிறுதிக்குள் நுழைந்த சிந்து….

Byகாயத்ரி

Dec 3, 2021

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் பிடபிள்யூஎப் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் பேட்மின்டன் இந்தோனேசியாவின் பாலித்தீவில் நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் ஏ பிரிவில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தினார்.

தொடர்ந்து நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் 31 நிமிடங்களில் 21-10, 21-13 என நேர் செட்களில் ஜெர்மனி வீராங்கனை யுவொன் லீயை வென்றார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியை வாய்ப்பை சிந்து அதிகரித்துள்ளார். இன்று நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி சோச்சுவாங் உடன் மோதுகிறார். சிந்து தவிர மற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று விளையாடிய ஆடவர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தனர்.