• Thu. May 9th, 2024

சிவகாசியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேச்சு…

ByG.Ranjan

Mar 31, 2024

சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் பங்கேற்க, தம்பதியருக்கு ஆண்டாள் கோவிலி லிருந்து வரவழைக்கப்பட்ட மாலையணிவித்து வேட்பாளர் ராதிகாவுக்கு ஆண்டாள் கையில் வைத்திருக்கும் கிளி வழங்கப்பட்டது.

கூட்டத்தில் வேட்பாளர் ராதிகா பேசியதாவது:- அரசியல் என்பது எனக்கு புதிதல்ல. நான் பல வருடங்களாக மேடைகளில் பேசி வருகிறேன். ஆனால் நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. என் கணவர் சரத்குமாருடன் நானும், பாஜகவில் முதன்முறையாக அரசியலுக்கு வந்தால் 100 சதவீதம் நேரம் செலவழிக்க முடியும் என இணைந்துள்ளேன். எப்பொழுதுமே நான் யோசிச்சு தான் முடிவு கூறுவேன். தெய்வ வாக்கு போல என்னை வேட்பாளராக அறிவித்தவுடன் எனக்கே தெரியாமல் நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். எப்பொழுதுமே யோசிச்சு தான் நான் முடிவு கூறுவேன். தொடர்ந்து 10 வருடமாக ஊழல் இல்லாத ஒரு சிறப்பான ஆட்சியை கொடுப்பது எவ்வளவு பெரிய விஷயம். இதன் மூலமாக தேசத்தை பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இந்தியன் என சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் பெருமை யடைகிறேன். இந்தியா முழுவதும் மோடி ஜி எனவும், பாரத்மாதாகி ஜே என்றும் ஒலிக்கும் போது,தமிழ்நாட்டில் மட்டும்தான் கடிவாளம் போட்டது போல மத வாதிகள் என்கின்றனர். நான் யார் என்று சொல்லிக் கொள்கின்ற தைரியத்தை பாரதிய ஜனதா கட்சி எனக்குத் தந்துள்ளது. ஜி எஸ் டி, குடியுரிமை சட்டம் போன்றவைகள் குறித்து மேடைக்கு மேடை பொய்யாக பேசுகின்றனர். இப்படிப் பேசுபவர்களுக்கெல்லாம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டோனி மாதிரி சிக்ஸர் அடித்து பதிலளித்து வருவதால் அனைவருக்கும் பயம் வந்து விட்டது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மனதில் இருக்க வேண்டும். எப்படி ஜெயிக்கணும் என்பது தலையிலிருந்து, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். எதிரிகளை எடை குறைவாக எடை போடக்கூடாது. அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் போராடி வெற்றிக்காக பாடுபட வேண்டும். நடிகர்கள் என்ற முறையில் என்னையும், சரத்குமாரையும் ஜனங்கள் பார்க்க வருவார்கள். அவர்களின் வாக்குகளை ஓட்டுக்களாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் வெறியாக செயல்பட்டு, விட்டுக் கொடுக்காமல் எதிரிகளை தெறிக்க விட்டு பயப்பட செய்ய வேண்டும். மோடி பற்றி யாரும் தவறாக பேசினால் சும்மா விடக்கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் எந்த ஊரையும் நான் விடமாட்டேன். ஒவ்வொரு வாக்குகளுக்காகவும் இறங்கி வாக்கு சேகரிப்பேன். நீங்கள் அனைவரும் எனக்கு சகோதரர்களாக இருந்து வெற்றிக்காக பாடுபட வேண்டும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *