• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ராம் இயக்கத்தில் அடுத்து சிம்பு?

Byமதி

Dec 4, 2021

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகி வசூலில் சதானை படைத்திவரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த வெற்றிக்குப்பிறகு சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.

இதில், ‘வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. ‘பத்து தல’ ‘கொரோனா குமார்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மூன்று படங்களிலும் நடித்தப் பிறகு சிம்பு இயக்குநர் ராம் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ராம் தற்போது நிவின் பாலி – அஞ்சலி இணையும் படத்தினை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.