ஜகமே தந்திரத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் மகான். விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இதில் இணைந்து நடித்துள்ளனர். வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா என மேலும் பலர் படத்தில் உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ படத்தை தயாரித்துள்ளது.
படம் வரும் பிப்ரவரி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் டப்பிங் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்து உற்சாகமுடன் தெரிவித்துள்ளார். டப்பிங் முடித்த உற்சாகத்தில் தந்தையும், மகனும் உற்சாகமாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.