



சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கபாலீஸ்வரர் கோயில். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.
இங்கு வருடாந்திர பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக கடந்த 3 தேதி தொடங்கியது. இந்த திருவிழா வரும் 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது. பங்குனி பெரு விழாவையொட்டி கிராம தேவதை பூஜையில் இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


இதனையடுத்து 5-ம்தேதி அதிகாரநந்தி எழுந்தருளும் நிகழ்வும், வரும் 9ம் தேதி தேர்திருவிழாவும், 10ம்தேதியன்று அறுபத்து மூவர் திருவிழாவும், 12-ம்தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து வரும் 13-ம்தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, 14-ம்தேதி திருமுழுக்குடன் பங்குனி பெருவிழாவானது நிறைவடைகிறது.
இந்நிலையில்மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ரூபாய் 1.56 கோடி மதிப்பீட்டில் நகாசு வேலைகளுடன் வெள்ளித் தகடுகள், உற்சவ புறப்பாடு மரயானை வாகனம் மற்றும் அம்பாரி ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோவில் நிர்வாகிகளிடம் வழங்குகினார்.

