• Wed. Dec 11th, 2024

குமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டு பூச்சி கூட்டு புழு விவசாய பயிற்சி பட்டறை.

பட்டு பூச்சி கூட்டு புழுவின் தாயகம் காஷ்மீர் கால ஓட்டத்தில் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவில் பட்டி, தென்காசி ஆகிய பகுதிகளில் பட்டுப்பூச்சி கூட்டு புழு விவசாயம் அறிமுகம் ஆகி பல காலம் கடந்து, குறிப்பாக கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வராஜ், பழனியை சேர்ந்த ராமசாமி ஆகியோர் கூட்டுபுழு வளர்ப்பில் வெற்றிகரமான விவசாயிகளாக மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டி வருவதையும் பட்டுப்பூச்சி கூட்டு புழு விவசாயத்தில் தமிழகத்தில் முன்னோடி விவசாயி என்ற அறிமுகத்தை வடக்கன் குளம் இந்தியன் வேளாண்மை கல்லூரி சார்பில் ஜாய்பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற பட்டு நூல் உற்பத்தி கூட்டு புழு வளர்ப்பு பட்டறையில் அறிமுகப்படுத்தினார் மதுரை மத்திய பட்டு நூல் வாரியத்தின் இயக்குநர் முனைவர் மகிமா சாந்தி.

பட்டு பூச்சி நூலில் ஆதாரமான கூட்டு புழுவை வாங்கி கொள்ளும் அரசின் சார்பிலான அங்காடிகள். தென்காசி, நாகர்கோவிலில் செயல் படுவதையும் பயிற்சி விவசாயிகளுக்கு தகவலாக தெரிவித்தார். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் பகுதிகளில் இருந்து பட்டு நூல் கூட்டு புழு பயிற்சி பட்டறையில் பங்கேற்றுள்ள இரு பால் விவசாயிகளை ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜாய் ராஜா வாழ்த்தி பேசியதுடன், தற்போது தக்காளி விவசாயிகள் பெற்றிருக்கும் அதிர்ஷ்டம் பற்றியும் தெரிவித்தவர் பட்டு பூச்சி கூட்டு புழு விவசாய பயிற்சியாளர்களுக்கு அவரது வாழ்த்துகளை தெரிவித்தார்.