
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி ) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தற்போது ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு வழங்காத நிலையில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழில் ஈடுபடக்கூடிய விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும இந்த தொழில் சார்ந்த மறைமுக தொழிலில் ஈடுபடக் கூடியவர்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தப்படி கூலி உயிர் வழங்கி விசைத்தறி கூடங்களை இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும் என தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
