• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி கடை உரிமையாளர் டீ மாஸ்டர் பலி..,

ByKalamegam Viswanathan

Dec 3, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(60) இவர் ஆண்டிபட்டி பங்களாவில் சைவ, அசைவ உணவகத்துடன் கூடிய டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

அந்தக் கடையில் சோழவந்தானை சேர்ந்த பாலகுரு (50) டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு சோமசுந்தரம் மகன் ரஞ்சித் குமார்(35) இருவரும் இரவு பணி செய்தனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன் பின் கடையின் முன்பாக இருந்த சீரியல் லைட்டுகளை டீ மாஸ்டர் பாலகுரு அவிழ்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது அதனால் பாலகுரு சத்தம் போடவே அவரை காப்பாற்றுவதற்காக சென்ற ரஞ்சித் குமார் மீதும் மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

உயிரிழந்த டீ மாஸ்டர் பாலகுருவுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஹாசினி என்ற மகளும் ஆறாம் வகுப்பு படிக்கும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் தாக்கி டீக்கடை உரிமையாளர் மற்றும் டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.