• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஷூட்டிங் முடிஞ்சது! அப்புறம் ஏன் பிபி-ல்ல இருந்து விலகினாரு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழுவினருடன் கமல் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

விக்ரம் படப்பிடிப்புக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் கமல் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விக்ரம் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினருடன் கமல்ஹாசன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் இணையத்தில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் விக்ரம் படப்பிடிப்பை முடிக்காமல் கால தாமதம் ஆகிறது என கமல் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் இந்த வாரத்திற்குள் விக்ரம் படப்பிடிப்பே நிறைவடைந்துள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலக வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளிலும் ஒரு தயாரிப்பாளராக கமல் கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது என்றும், சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் பணிகள் என ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் டாட்டா காட்டி உள்ளார் என்றும் ஏகப்பட்ட விளக்கங்களை கமல் ரசிகர்களே கூறி வருகின்றனர்.