காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மாலதி தம்பதியினரின் மகன் பால மணிகண்டனுக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவியின் தாயார் தன் மகளை விட நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுப்பதன் காரணமாக பால மணிகண்டனை கொலை செய்யும் நோக்கில் கடந்த 02.09.2022 அன்று குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து மாணவன் பால மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்த சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த விசாரணை காரைக்கால் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வ முத்துக்குமாரசாமி, குற்றவாளி சகாயராணி விக்டேரியாவுக்கு தூக்கு தண்டனை அளிக்குமாறு வாதாடினார். வாதத்தைக் கேட்டு நீதிபதி தூக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து சகாயராணி விக்டோரியாவிற்கு ஆயுள் தண்டனையும் 20000 அபதாரம் அளித்து அதிரடி தீர்ப்பை வழங்கினார்.