• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நகராட்சி அலுவலர் வீட்டில் இரண்டாவது கொள்ளைச் சம்பவத்தால் அதிர்ச்சி…

ByP.Thangapandi

Nov 18, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சிவன்காளைத்தேவர் தெருவைச் சேர்ந்த சாந்தா என்பவர் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ஆறரை பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரும் நிலையில், நேற்று சாந்தா சென்னை சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவு மற்றும் பீரோவின் பூட்டுகளை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து வந்த பின்னரே எவ்வளவு பணம் நகை கொள்ளை போனது என தெரிய வரும் என கூறப்படும் நிலையில், ஒரே வீட்டில் இரண்டாவது முறையாக கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.