விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 63) சலவை தொழிலாளி வீட்டில் இருந்து கண்மாயில் குளிக்க செல்வதாக சொல்லிவிட்டு சென்றார். சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

அப்போது கண்மாயில் ஒருவர் பிணமக மிதப்பதாக தகவல் கிடைத்தது அதன் பேரில் அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இருந்தது ஐயப்பன் தான் என்பது தெரிவந்தது உடனடியாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஐயப்பன் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)