• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரியில் மட்டுமே கொண்டாடும் சிவாலயம் ஓட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாராத்திரையொட்டி 12சிவாலங்களை விரதமிருந்து பக்தர்கள் 108கிலோமீட்டர் ஓடி சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நேற்று (மார்ச்.7)மாலை துவங்கியது தமிழக கேரளாவிலிருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

மஹாசிவாராத்திரி நாளை இரவு அனுஷ்டிக்கபடுகிறது இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமையும் பிரசித்தி பெற்றதுமான  சிவாலய ஓட்டம் துவங்கியது மஹாசிவராத்தியை யொட்டி ஏகாதசி நாளிலிருந்து தீயினால் சுட்ட உணவுகளை அருந்தாமல் விரதமிருந்து தங்கள் வேண்டுல்கள் நிறைவேறுவதற்காக பக்தர்கள் முதல் சிவாலயமான முஞ்சிறை திரூமலை மஹாதேவர் ஆலயத்திலிருந்து, பலரின் கைகளில் விசிறியுடன் ஓட தொடங்கிய பக்தர்கள் திக்குறிச்சி, திற்பரப்பு, திருதந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்காடு திருவிதாங்கோடு, திற்பந்நிகோடு மற்றும்  திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயம் வரை உள்ள 12சிவாலங்கள்  108கிலோமீட்டர் தூரத்தை ஓடி சென்று வழிபடுவது சிவாலய ஓட்டம் என்றழைக்கபடுகிறது. இந்த சிவாலய ஓட்டம் (மார்ச்_7) முஞ்சிறை திருமலை மஹாதேவர் திருக்கோவிலிலிருந்து துவங்கியது. இந்த சிவாலய ஓட்டத்தில்  தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் ஓடி சென்று வழிபடுகின்றனர் இந்தியாவிலேயே மஹா சிவராத்திரையொட்டி பக்தர்கள் 12 சிவாலங்களை ஓடி சென்று வழிப்படும் வழிபாடு குமரி மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடதக்கது. இந்த விழாவை ஒட்டி குமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்_8) உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.