குமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்_8) சிறப்பு உள்ளூர் விடுமுறை என்பதால், உலக மகளிர் தினம் ஒரு நாள் முன்பாக நேற்று (மார்ச்_7)ம் நாள், குமரி ஆட்சியர் அலுவலகம், பல்வேறு பெண்கள் கல்லூரிகளில் கொண்டாடினார்கள்.
நாகர்கோவிலில் நீதிமன்றத்தில் உலக மகளிர் தினம். நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பாலஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் துணைத்தலைவர் ரேகா வர வேற்று பேசினார். வழக்கறிஞர் மதி மகளிர் தின விழிப்புணர்வு பாடலை பாடினார்.
வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நிகழ்வில். மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசியது.
சமுகத்தில் ஆணுக்கு, பெண் சமம் என்ற நிலையில் உயர்ந்துள்ளீர்கள். பெண் சக்தி என்றும் உயர்வானது. தற்போது உள்ள நவீன காலத்தில் எல்லா துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.
இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து காட்டி வருகிறார்கள். பெண்களை முன்னிறுத்தி நடத்தும் எந்த செயலும் திறன் பட இருக்கும்.
மகளிர் சம உரிமை பெற்று வாழ வேண்டும். மகளிர் தினம் என்று ஒன்றை தனியாக கொண்டாட வேண்டிய தேவை இல்லை. இந்த நிலை மாறி மகளிருக்கு நிறைவான உரிமை பெற்ற சூழல் உருவாக வேண்டும். அத்தகைய நிலை உருவாக இது போன்ற விழா உன்னதமாக இருக்கும்.
மகளிர் சம உரிமை பெற்று வாழ மகளிர் தின வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என நீதிபதி கார்த்திகேயன் கூறினார்.