

குமரி மாவட்டத்தில் ஒரு மக்களவையும்,6_சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது. பத்மநாபபுரம் சட்டமன்றத்தில் கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ந்து திமுக வெற்றி பெற்றுள்ளது. இப்போதைய சட்டமன்ற உறுப்பினரான. தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இரண்டாவது முறையாக பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டவர்.குளச்சல், விளவங்கோடு தொகுதிகளில். கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதிகள். கிள்ளியூர் சட்டமன்றத்தில் காங்கிரஸ், நாகர்கோவிலில் பாஜக, கன்னியாகுமயில் அதிமுக தொகுதிகள். மக்களவை பொதுத் தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடக்க இருப்பதால், விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தல் வாக்கு பதிவிற்கான 550_வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் , விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இன்று கொண்டுவரப்பட்டது.
குமரிக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.


