• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைசியாக தேங்காய் உடைத்த சிவ.வீ.மெய்யநாதன்..,

Byமுகமதி

Mar 8, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள கல்லாலங்குடியில் கடந்த வாரம் குடமுழுக்கு செய்யப்பட்ட கோவில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் ஆகும். அப்பகுதியில் உள்ள மக்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் இக்கோவில் மிகவும் பழுதடைந்து சிதறலடைந்து கிடந்த நிலையில் கிராம மக்கள் மற்றும் பல்வேறு நன்கொடையாளர்களின் உதவியுடன் அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

அந்த நிகழ்விற்கு ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு அமைச்சர் அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் வந்திருந்தார். அப்போது அந்த கோவிலுக்குப் பாத்தியப்பட்ட மக்கள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அந்த கோவில் ஆலங்குடி கொத்தமங்கலம் சாலையிலிருந்து அருகில் தான் இருக்கிறது என்ற போதிலும் குளத்துக்கரை என்பதால் அதில் ஒரு பேவர் பிளாக் சாலை ஒன்று அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தான் அது. அதை நான் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்த அமைச்சர் மெய்யநாதன் அதற்கான தேதியை அறிவியுங்கள் நான் வருகிறேன் என்று சொல்லி இருந்தார். அதன்படி அவர்கள் கேட்டுக் கொண்ட படி மீண்டும் கோவிலுக்கு வந்த அமைச்சர் மெய்யநாதன் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பேவர் பிளாக் சாலை அமைத்து தர ஏற்பாடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தினார்.

அதிமுக ஆட்சியை பொறுத்தமற்றிலும் இது போன்ற நிகழ்வுகள் பூமி பூஜையாகப் பார்க்கப்பட்ட நிலையில் இப்போதுள்ள திமுக ஆட்சியிலும் பல தொகுதிகளில் அதேபோல் பூமி பூஜை என்கிற பெயரில் விழாக்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இவர் மட்டும் அடிக்கல் நாட்டு விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களிலும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த அமைச்சர் மெய்ய நாதன் அவர்களிடம் அங்கிருந்த கிராம மக்களும் மற்றவர்களும் தேங்காய் உடைத்து பூஜையை தொடங்கி வைக்கச் சொன்னார்கள். இவர் அடிப்படையில் பெரியாரிஸ்ட் என்றாலும் பெரியார் வழியிலேயே மற்றவர்கள் மனம் கோணக் கூடாது என்பதால் அவர்கள் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் முகத்தான் அந்த கோவிலில் இருந்து வழங்கப்பட்ட திருநீரையும் பூசிக்கொண்டு வந்த அவர் அடிக்கல் நாட்டு விழாவில் அவருக்கு அடுத்தபடியாக உள்ள அங்கிருந்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றிய, தாலுக்கா அலுவலர்கள் என அனைவரையும் முதலில் தேங்காய் உடைக்க செய்துவிட்டு பிறகு கடைசியாக நானும் ஒரு தேங்காயை உடைத்து அந்த விழாவை நிறைவு செய்து, அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆண்கள் பெண்கள் அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு காரில் ஏறிச் சென்றார்.

யாரை சிறப்பு அழைப்பாளராக நிகழ்வுக்கு அழைக்கிறார்களோ அவர்கள்தான் இது போன்ற நிகழ்வுகளை முன் நின்று செயல்படுத்துவார்கள் என்பது கடந்த கால வரலாறு என்ற போதிலும், இவர் மட்டும் மற்றவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து தானும் அதில் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொள்வதை பலரும் வியப்பாக பார்க்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் பல்வேறு கட்டடங்களுக்கு திறப்பாளர்களாக மாணவ மாணவியர்கள், சின்னஞ் சிறுமியர்கள், கிராமத்து மக்கள் என அனைவரையும் பங்கேற்க செய்திருக்கிறார், இது போன்ற பல செயல்களில் இதுவும் ஒன்றுதான் என்று பலரும் மாண்புமிகு அமைச்சர் மெய்யநாதனை பற்றி விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.