

பெரிய நகரங்களில் தொடரும் வன்முறையால் இந்தியாவின் பொருளாதாரம் இலங்கை மற்றும் உக்ரைனை விட மோசமாகும் என சிவசேனா கட்சியின் எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட இந்திய மாநிலங்களில் விநாயகர் ஊர்வலம் உள்ளிட்ட மதம் சார்ந்த நிகழ்வுகள் வன்முறை ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது.
பல்வேறு வட மாநிலங்களில் சமீபத்தில் ராமநவமி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா உள்பட சில மாநிலங்களில் வன்முறை வெடித்தன.
இதே போல தலைநகர் டெல்லி ஜஹாங்கிர்பூரியில் கடந்த சனிக்கிழமை நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசியபோது.
நம்நாட்டின் தலைநகரான டெல்லியில் வன்முறை நடந்துள்ளது. டெல்லி என்பது யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் அது மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்நேரத்தில் வன்முறை நடக்கிறது. இவை அனைத்தும் தேர்தலில் பாஜகவெற்றி பெறவே நடப்பதாக நினைக்கிறேன்”
மேலும் அவர் கூறுகையில்,
இதுபோன்ற வன்முறைகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் இலங்கை, உக்ரைனை விட மோசமாக மாறும்” என எச்சரிக்கை விடுத்தார்.
