திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழாவிற்காக முருகன் கோவர்தனம்பிகையிடம் “சக்தி வேல் வாங்கும் விழா ” நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டிதிருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.கந்த சஷ்டி திருவிழாவையொட்டிஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கடும் விரதம் இருந்து வருகிறார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி ” சக்தி வேல் வாங்குதல்” நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் சத்தியகிரிஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேவேளையில் முருகப்பெருமான் எழுந்தருளினார். இந்நிலையில் முருகப் பெருமானின் பிரதிநிதியாக காப்பு கட்டி. விரதமிருக்கும் சிவச்சந்திரன் சிவாச்சாரியருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து முருகப்பெருமானின் தாயாரான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்துசூரபத்மனை வதம் செய்ய “சக்தி வேல்” ” (நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட வேல்) பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க கோவர்த்தானாம்பிகை சன்னதியில் இருந்து முருகப்பெருமான் பிரதிநிதியான சிவச்சந்திரன்பட்டர் தனது கரத்தில் வேலை சுமந்தபடி சகல பரிவாரங்களுடன் புறப்பட்டு வந்தனர்.
இதற்கிடையில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ளசிவபெருமானின் வாகனமான நந்தியை வலம் வந்து சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் கோவர்த்தனாம்பிக்கையிடம் பெற்ற சக்திவேலை (நவராத்தினங்களால் இழைக்கப்பட்ட வேல் )முருகப்பெருமானின் திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து மகாதீப , தூப, ஆராதனை நடை பெற்றது. கந்த சஷ்டி விழாவில் சூரபத்மனை வதம் செய்ய போர்த் நம்பிக்கையிடமிருந்து வெற்றிவேல் முருகனுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என பரவசத்துடன் கோசங்களை எழுப்பினர்.