• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரஜினி,விஜய் குறித்து ஷாருக்கானின் வைரலாகும் பதிவு..

ByA.Tamilselvan

Oct 9, 2022

ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கும் நடிகர் ஷாருக்கானின் சமூக வலைத்தள பதிவு
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்து உரையாடியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார். ஷாருக்கான் மேலும் அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த அனுபவப் பதிவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.