• Thu. Jun 1st, 2023

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது!

பொள்ளாச்சி பாலக்காடு ரோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(34).. திருமணமான இவர், அப்பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு செய்து வருகிறார்.. அதே பகுதியில், 28 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்! சமீபத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்ற அப்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது!

அதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், பாலசுப்ரமணியம் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தது தெரியவந்தது! இதையடுத்து பாலசுப்ரமணியத்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *