மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த 9 வயது பெண் குழந்தையின் பெற்றோர்கள் வெளியூர் சென்ற நிலையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற முதியவர் (வயது 51) 9 வயது குழந்தையிதம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து குழந்தை தனது உறவினரிடம் அழுது கொண்டே நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளது. உடனே அவர்கள் முதியவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று பாலியல் சீண்டலில் இவர் ஈடுபட்திருந்து தெரியவந்ததது உடனே இது குறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குழந்தைகளிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் பாலியல் சீண்டலில் ஹரிஹரன் ஈடுபட்டது உறுதியானதையடுத்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்த பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.